எண்ணூரில் உள்ள அம்மா உணவகத்தில் 14 நாட்கள் இலவச சாப்பாடு

அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவு காரணமாக வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமங்களை அடைந்து வருகின்றனர் குறிப்பாக தினசரி வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இல்லாததால் அவர்கள் உணவுக்கு கஷ்டப்படும் ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறது ஒரு சில இடங்களில் பலர் மற்றும் சமுதாய அமைப்புகள் அறக்கட்டளைகள் உணவுகள் வழங்கி வருகின்றனர் எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் தினசரி தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர் இவர்கள் பெரும்பாலும் அங்கு உள்ள அம்மா உணவகத்தை பயன்படுத்தி வந்தனர் தற்போது வேலை இல்லாத சூழ்நிலையில் அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது அப்பகுதி தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உத்தரவின்பேரில் 3 வது வட்ட கழக அதிமுக அவைத்தலைவர் சோழ பாண்டியன் அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் 144 தடை உத்தரவு 14 நாட்கள் முடியும் வரை இலவச சாப்பாடு வழங்குவதாக அறிவித்தார் அதற்கான கட்டணத்தை அவரே செலுத்தி விடுவதாகவும் அறிவித்துள்ளார் இதனால் அப்பகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிடலாம் என அவர் கூறியுள்ளார்,