ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். 2017 படைவீரர் கொடி நாளில் அதிக நிதி வசூல் செய்து கொடுத்த அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி

அவர்களால் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். குறைதீர்வு நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் குடும்பங்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஆர்.ஜெயச்சந்திரன், முன்னாள் படைவீரர் உதவி இயக்குனர் க.செந்தில்குமார் (ஓய்வு) முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் திரு. எட்வர்ட்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..