சென்னை பழைய வண்ணாரப் பேட்டை நாராயண தோட்டத்தில். இயங்கிவரும் தங்கக்கிளி தனியார் திருமண மண்டபத்தில். வடச்சென்னை வியாபாரிகள், சங்க தலைவர் ஜி.ராபர்ட். தலைமையில். செயலாளர் சேவியர் ஏற்பாட்டில். மாநகராட்சி நான்காவது மண்டலம். ஐந்தாவது மண்டலத்தின், அதிகாரிகளை வரவழைத்து கடை உரிமம் தொழில் உரிமம் புதிதாக பதிவு செய்வதும். புதுப்பிப்பதும் என முகாம் நடைபெற்றது. இதில் உதவி வருவாய்த்துறை அதிகாரி துரைராஜ், மாநகராட்சி உரிம ஆய்வாளர்கள் தினேஷ்குமார், சாம்சங், சிவநேசன், சத்யராஜ், குரு கண்ணன், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தொழில் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடச்சென்னை வியாபாரிகள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள். கலந்து கொண்டனர்.