சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 1000 பேருக்கு வீடு வீடாக உணவு வழங்கப்பட்டது.

திமுக கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படியும் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டியும், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்,
தா.இளையஅருணா
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி
சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன்
ஆகியோரின் ஆலோசனைப்படி
பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவில் நடைபெற்றது.

மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள்
மா.ரூபசங்கர், கோ.ஹரிராமன்
கே.தேவபிரசாத் முன்னிலையில்.

வட்ட பொறுப்பாளர் ச.தமிழ்ச்செல்வன். தலைமையில்

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என்.மருதுகணேஷ்
பொதுமக்களுக்கு
உணவு வழங்கினார்.

கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தயார் செய்யப்பட்ட உணவு. சைக்கிள் ரிக்சாவில் வைத்து. ஆரணி ரங்கன் தெரு, மேயர்பாசுதேவ் தெரு, மற்றும் பகுதி சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் வீடு வீடாக சென்று உணவு வழங்கப்பட்டது .