கொரானா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவை பிறப்பித்த நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் இழந்து கஷ்டமான சூழலுக்கு தள்ளப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் உணவு பொருட்கள் வழங்கி வருகிறார் அதில் ஒரு பகுதியாக பெரம்பூர் தொகுதியில் 5000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு சமையல் எண்ணெய் மற்றும் ஐந்து வகையான காய்கறிகள், அடங்கிய நிவாரணத் தொகுப்பை. சென்னை மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் வழங்கினார். உடன் பகுதி செயலாளர் ரமேஷ், கணேசன், சேர்மன், இளங்கோவன், அஸ்லாம், இளங்கோவன், உமாபதி, கோபி, கஜேந்திரன், கிருஷ்ணா, ஆனந்த், மற்றும் அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.