சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இரண்டு நபர்களை கைது செய்யப்பட்டு‌ 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடசென்னையில் தொடர்ந்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் திருடு போவதை தடுக்கும் வகையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அறிவுறுத்தலின்படி. அனைத்து காவல் ஆய்வாளர்களும் தீவிர வாகன சோதனையில். ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் காவலர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக வந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த ராக்கி என்கின்ற ராகேஷ் (வயது28) என்பதும். தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த இவரின் நண்பர்
தருண் கிருஷ்ணன் (வயது21) மற்றும் 3 சிறுவர்கள் உடன் வைத்துக்கொண்டு வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேற்கொண்ட விசாரணையில் திருடிய இருசக்கர வாகனங்களை பல பகுதிகளில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனடியாக 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவலர்கள் ராகேஷ், தருண்கிருஷ்ணன், மற்றும் மூன்று சிறுவர்களை நீதிமன்ற காவல் நிலையத்திற்கு உட்படுத்தினர்.