தமிழ்நாடு எல்லை அடுத்த ஆந்திர மாநிலம் ராமகிரி என்ற இடத்தில் ஆந்திரா அரசு பேருந்தும் மகாராஷ்டிராவை சேர்ந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சத்தியவேடு டிப்போ வில் ஓடும் அரசு பஸ் சுமார் 30பயணிகளை ஏற்றுக்கொண்டு இன்று மாலை 3 மணி அளவில் திருப்பதிக்கு புறப்பட்டது அந்த சமயம் ராமகிரி என்ற ஊர் அருகில் சென்றுகொண்டிருந்தபோது சுமார் 4:30 மணி அளவில் மகாராஷ்டிராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது லாரியில் உள்ள இரும்பு தகடுகள் பஸ் மற்றும் சுமோ வின் மீது விழுந்தது இதில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பிச்சாட்டூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.