சென்னை காசிமேட்டில் பாரம்பரிய மீனவமக்களின் நலன் மற்றும் மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க,
தமிழ்நாடு மீன்வளத்துறையை,
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக பெயர் மாற்றக்கோரியும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் தாமதமின்றி உடனே கிடைக்கவும்,
நலத்திட்ட உதவிகளை பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசுக்கு எதிராக, நிறுத்திய மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
18 வயது நிறைந்த
மீனவ சமுதாய ஆண்கள் மற்றும் பெண்களை
மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து, சேமிப்பு நிவாரண நிதி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம்,
மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணம், நலவாரிய பயன்கள் மற்றும் மானிய டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றை
தாமதமின்றி உடனே வழங்கக்கோரியும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் தேசிய செயல்தலைவர் நாஞ்சில் ரவி , தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாரதி, தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.