திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் பக்கிங்கம் கால்வாய் ஓரமாக ஏராளமான கன்டையினர் லாரிகள் நிறுத்தி வைப்பது வழக்கம் இன்று திடீரென கன்டைனர் பெட்டிகள் இல்லாத டிரைலர் லாரியின் 8 டயர்கள் கொழுந்து விட்டு எரிந்தது
இதனையடுத்து அந்த பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் திருவொற்றியூர் மணலி ஆகிய 2 இடங்களில் இருந்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் டயர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர் இதில் லாரி டயர்கள் முற்றிலும் எறிந்து சேதமடைந்தது இதனையடுத்து சாத்தாங்காடு போலீசார் விசாரணை மேற்க்கொண்டதில் லாரி உரிமையாளர் ரவி என்வருக்கு சொந்தமான லாரி என்றும் லாரி அருகில் குப்பைகள் இருந்ததால் குப்பையில் ஏற்பட்ட தீ லாரி டயர் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு யாரேனும் தீ வைத்தனர என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.