சென்னை முழுவதும் தீயணைப்புத்துறையினர் விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றன.

இன்று சென்னையில் முக்கிய இடமாக கருதப்படும் உயர் நீதிமன்றத்திலிருந்து ஆரம்பித்து என்.எஸ்.சி, போஸ் ரோடு வழியாக, வால்டாக்ஸ் ரோடு வந்தடைந்து. மின்ட் பஸ் நிலையம் அருகே ஊர்வலத்தை நிறைவுபடுத்தினர்.

தீயணைப்புத்துறை வீரர்கள் இருசக்கர வாகனத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

வட சென்னை மாவட்டத்தின் தீயணைப்புத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன். தலைமை தாங்கி இந்த ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.