சென்னை முழுவதும் கஞ்சா வியாபாரம் அதிகரித்து வரும் நிலையில் காவல் ஆணையர் விடாமுயற்சியால் பல பகுதிகளில் தீவிர சோதனை செய்து. கஞ்சா வியாபாரம் செய்பவர்கள், முதல் கஞ்சா புகைக்கும் நபர்கள் வரை. காவல்துறையினர் கைது செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக ஆர்கே நகர் காவல்துறையினர், கஞ்சா வியாபாரம் செய்துவரும். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த வினோதினி (வயது 23) தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 29) இருவரையும் கைது செய்து, 2300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து. கஞ்சா வியாபாரத்திற்கு பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் காரையும், பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.