ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தேடல் கிராமப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ரெட்டி(60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(63) என்பவருக்கும் 40 செண்ட் நீர்த்தேக்கல் புறம்போக்கு நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பிரச்சனைக்குரிய 40 சென்ட் நீர்த்தேக்கம் புறம்போக்கு இடத்தை ஆறுமுகம் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஜேசிபி எந்திரம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த மோகன்ரெட்டிக்கு ஆறுமுகத்துக்கு ஏற்பட்ட தகராறில் மோகன் ரெட்டியை வெங்கடேசன் கத்தியால் குத்த ஆறுமுகம் கட்டையால் தாக்கியதில் மோகன் ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுதொடர்பான வழக்கு அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்நிலையில் வழக்கை விசாரித்த இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் தந்தை ஆறுமுகம், மகன் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 7,000 ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.