சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சையத் இப்ராஹீம் (வயது 57) ராயபுரம் மேம்பாலத்தில் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நான்காவது தளத்தில் வசிக்கும் இவர் சென்னை பாரிமுனையில் ஓட்டல் நடத்தி வருகிறார். மூன்று பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்திருக்கும் நிலையிலும் கூட அடிக்கடி கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது கடந்த ஒரு வருட காலமாகவே இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் தனித்தனியே ஒரே வீட்டிற்குள் சமைத்து உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி நிஷாவிற்கு தன் அக்கா மகன் அன்சாருதீன் அனைத்து பணிகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் உதவியாக இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இப்ராகிம் அன்சாரிதின் இடம் நீ ஏன் என் மனைவிக்கு உதவி செய்கிறாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இப்ராகிம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அன்சாரூதினை சுட்டுள்ளார். இதில் கையில் குண்டு துளைத்து உள்ளது. பின்னர் இப்ராஹிக்கும் கையில் காயாம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த ராயபுரம் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.