சென்னை, எண்ணூர், ராம மூர்த்தி நகர் முதல் தெருவில், அண்ணன், தம்பியான இருவர் மளிகை கடை வைத்துள்ளனர்,டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்ட சிலர், இவர்களின் கடைக்கு சென்று போனதாக தகவல் வெளியானது. தகவலின் அடிப்படையில் துணை ஆணையர் ரவளிப்பிரியா, சுகாதாரத்துறை மற்றும் மாநகாரட்சி அதிகாரி பால்தங்கத்துரை, உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்றனர், அங்கு, அவர்களிடத்தில் நடத்திய பரிசோதனையில், அவர்களில் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டன, பின்னர், அவர்கள் இருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டனர்.தனிமைப்படுத்தப்பட்டோர் என அவர்களின் வீட்டில், நோட்டீஸ் ஒட்டப்பட்டன, விசாரணையில், டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்ட சிலர், இவர்களின் கடைக்கு சென்று போனது தெரியவந்தது, மேலும், அந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் உள்ள வராதபடி அந்த பகுதியில் உள்ள மக்களும் வெளியில் எங்கும் செல்லாத படி 5 வழிகளில் தகடுகளால் மற்றும் பேரி காடுகள் வைத்து அடைக்கப்பட்டனர்.