வியாபாரிகள் சங்கங்களை அழைத்து கொரானா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தண்டையார்பேட்டை காவல் துறையினர் விழிப்புணர்வு கொடுத்தனர்.

தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவல் ஆய்வாளர் தேய்வேந்திரன் தலைமையில் கொரானா தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை குறைக்கும் வகையில் அரசு பலவிதமான நடவடிக்கை எடுத்து வருகின்றது காவல்துறையினரும் அவரவர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் நிகழ்ச்சிகள் வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக என தினமும் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக இன்று தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வியாபாரிகள் சங்கங்களுக்கு காவல் ஆய்வாளர் தேய்வேந்திரன் அழைப்பு விடுத்தனர் அழைப்பு ஏற்று அப்பகுதியில் இயங்கி வரும் வியாபாரிகள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தண்டையார்பேட்டை காவலர் சமுதாய கூடத்திற்கு வந்தனர். அப்போது கூறிய காவல் ஆய்வாளர் தேய்வேந்திரன் கொரானா தொற்று வட சென்னையில் அதிக அளவில் பரவி வருவதால் அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கடைக்கு வரும் மக்களிடம் சுவாசக் கவசம் அணிய வேண்டும் அணிந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் அனைத்து கடைகளிலும் ஷானிடைசர் வைத்து வரும் மக்களுக்கு கையில் தெளிக்கவேண்டும் தெளித்த பின்னே கடைக்குள் வரவேண்டும் என்று தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் தேய்வேந்திரன் தலைமையில் காவலர்கள் ஒன்றிணைந்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட சென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக தலைவர் பாலகுருசாமி, பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சித்தி, செயலாளர் விஜய நாகேந்திரன் மற்றும் வடசென்னை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.