குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது பிளாக் டிவிசன் 35 ல் தான் இந்த கொடுமையான சம்பவம் கடந்த ஒரு மாத காலமாக வெற்றி கரமாக அரங்கேறி வருகின்றன.குடிநீரில் விஷம் கலந்து வருவதை போல் கழிவுநீர் வருகிறது இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது குழந்தைகள் நல்ல தண்ணீர் என்று தெரியாமல் கழிவுநீரையே குடித்து வாந்தி எடுக்கும் சம்பவமும் நடந்தேறியது, இதுகுறித்து சென்னை மாநகராட்சி குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கவனத்திற்கு பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை இதேநிலை தொடருமானால் மக்களுக்கு கொரானாவைப்போல் புதிதாக ஒரு கிருமிகள் இந்த கழிவுநீரில் உற்பத்தி யானாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை இதை கருத்தில் கொண்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் தக்க நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வது ஏன் என்று புரியவில்லை ஆகவே சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.