சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம்,ரேஷன் அலுவலகம், மத்திய அரசுவங்கி அலுவலகம்,போன்ற அரசு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது, இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரியின் வாகனத்தில் பின்னாடி நாய் ஒன்று இறந்த நிலையில் கிடந்ததால்.

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இப்போது இருக்கும் கால கட்டத்தில் உலக முழுதும் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் கிருமிகளால் பொதுமக்கள் அச்சப்படும் சூழ்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நாய் இறந்து துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்