சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கருப்புச்சட்டை அணிந்து மதுபானக் கடைதிறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தி.மு.க. கழகத்தலைவர் வேண்டுகோள் படி, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆலோசனைப்படி, கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை காக்க தவறிய , மக்களின் குடியை காக்க தவறிய அதிமுக அரசை கண்டித்து தி.மு.க. கட்சியின் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என்.மருதுகணேஷ் கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவில் அமைந்துள்ள தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் கருப்பு சட்டை அணிந்து , அரசை கண்டித்து மதுபானக்கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன். முழக்கமிட்டனர் உடன் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.குப்பன்,பார்வதி, நாராயணசாமி,எஸ்.தமிழ்செல்வன், கோ.ஹரிராமன், க.மனோகரன், வி.மோகன், கோ.கார்த்திக், என்.திருநாவுக்கரசு, எஸ்.கே.ஹரிபாபு, எஸ்.லோகநாதன், சி.ஜி.யுவராஜ், எஸ்.வரதன், எஸ்.மணிவண்ணன், ராஜேஷ், எல்.சீனிவாசன், வி.சத்யா, போட்டோ சுரேஷ், அ.ச.குலசேகரன், எல்.கோகுல், ஆர்.சந்தோஷ் மாரி, மணிகண்டன், முரூகேசன், குமார், உள்ளிட்டோரும், மற்றும் பொதுமக்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்.