பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அ.தி.மு.க, சார்பில் வட சென்னை புது வண்ணாரப்பேட்டை. சுங்கச் சாவடி அருகே கிருமி நாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

அ.தி.மு.க, வட சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கிரிமி நாசினி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்.அ.தி.மு.க. சார்பில்
கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்க கிரிமி நாசினி தற்காப்பு
சுரங்கம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுரங்க பாதை வழியாக சென்று தங்கள் உடம்பில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து கொண்டனர்.

இது குறித்து பேட்டியளித்த அ.தி.மு.க, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கூறுகையில் புது வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தினசரி 5 ஆயிரம் மக்கள் வந்து போவார்கள். எனவே மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் கிருமி நாசினி சுரங்கத்தை அ.தி.மு.க, சார்பில் திறந்துள்ளோம். இதன் மூலம் தினசரி 5 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள். சுரங்கம் வழியாக வரும் போது அவர்கள் உடல் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்படும். இதனால் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் ” என்றார்.