சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலிவலகத்தில் நேற்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். மேலும் வட்டாட்சியர் அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதால் அங்கு பணியாற்றும் ஊழியர்களை கவனமுடன் பணியாற்ற வேண்டும் எனக்கூறினார். மேலும் திருவொற்றியூர் பகுதியில் உள்ள டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து துன்புற்று வருவதாக வந்த தகவலையடுத்து 15 மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்களான 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களான சானிடைசர், சுவாச கவசம் மற்றும் கை துடைப்பான் ஆகியவற்றை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலவாழ்வு அதிகாரி பாலாஜி, தாசில்தார் கணேசன் ஆகியோர் உட்பட பலர் இருந்தனர்.