கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் கொரோனா தொற்று நோய் தடுக்கும் முயற்சியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர். சைலேன்திர பாபு, உத்தரவின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று நோயை தடுக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைதல் போட்டி முதலில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அதில் சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியம் வரைந்த முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதிலிருந்து மண்டல வாரியாக மூன்று நபர்கள் தேர்வு செய்து பின்னர் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து அவர்களில் சிறந்த ஓவியம் வரைந்த முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசு வழங்குதல் விழா காணொளி காட்சி மூலம் இன்று சைலேன்திர பாபு அவர்கள் தலைமையில் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். மேலும் இதில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்ந்த இணை இயக்குனர் பிரியா, ரவிச்சந்திரன், வடசென்னை மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன், புறநகர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி, மற்றும் மத்திய சென்னை மாவட்ட அலுவலர் தென்னரசு, ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.