தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி
சென்னையில் கொருக்குப்பேட்டை 41 வது வட்டம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை இன்று வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், நிவாரணமாக வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க சமூக விதிகளை பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கினார்.
இதில் பகுதி அவைத்தலைவர் எம்.வேலு, ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், மாதவன், பிரசாந்த், கவுனர்கான், சக்திவேல், உள்ளிட்ட பலர் இருந்தனர்.