சென்னை திருவெற்றியூர்
அம்பேத்கார் நகர் ,மற்றும் பலகைதொட்டி குப்பம் மக்களுக்கு
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் திருவெற்றியூர் விம்கோ நகர் அருகில் உள்ள அம்பேத்கார் நகர் மற்றும் பலகை தொட்டிக்குப்பம் பகுதி பொது மக்களுக்கு அரிசி வழங்கினார். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் நகர்பகுதி அ.தி.மு.க. வினர் விம்கோ லெனின் புகழேந்தி. பழனிச்சாமி. கல்யாண
சுந்தரம். ராமானுஜம். ஸ்டாலின். மற்றும் முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம். கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும்
நிர்வாக இயக்குனர் கார்த்திக். கலந்து கொண்டனர்.

திருவெற்றியூர். செய்தியாளர் கருணாகரன்