கொரோனா தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் ரோட்டோரம் வாழ்ந்து வரும் மிகவும் நலிவடைந்த ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்கு கையேந்தும் நிலை உருவாகி இருக்கும் சூழ்நிலையில்.

இவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தினந்தோறும் உணவுகளை வழங்கி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையர் சுப்புலட்சுமி, உணவின்றி தவிர்த்து வரும் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர் கே நகர், திருவெற்றியூர், மற்றும் சுத்து வட்டார பகுதிகளில் ரோட்டோரத்தில் வசித்து வரும் ஏழை மக்களை நேரில் தேடிச்சென்று அவர்களுக்கு உணவை வழங்கினார். இவர் இரவு பணி முடிந்து வீடு செல்லும் வழியில் வாய் பேச முடியாத ஜீவராசிகளுக்கும் உணவு வழங்குவது வழக்கம் மனித நேயம் மிக்க இந்த துணை ஆணையரின் செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாராட்டி வருகின்றனர்