ஊரடங்கு உத்தரவினால் கூலித்தொழிலாளர்கள் பொருளாதாரம் இழந்து மிகவும் திண்டாடி வருகின்றனர். முழு ஊரடங்கு அறிவித்த பின் ஏழை எளிய மக்கள் உணவு சமைக்க அரிசி காய்கறி போன்ற பொருட்கள் வாங்க வழி இன்றி தவித்து வரும் இந்நிலையில் ஒரு பகுதியாக. கொருக்குப்பேட்டை மீனம்பால் நகர் ரயில்வே ட்ராக் ஓரமாக குடிசையில் வசித்துவரும் ஏழை-எளிய மக்கள் மற்றும் தண்டையார்பேட்டை நாய் கோட்ரஸ் அருகில் பொம்மை செய்து விற்கும் தெருவோரம் வசித்து வரும் நலிவடைந்த சுமார் 500 கும் மேற்பட்ட நபர்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி. குடிசை குடிசையாக நேரடியாகச் சென்று

5 கிலோ அரிசி வழங்கினர். உடன் புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் சரவணன். ஆர்.கே.நகர் ஆய்வாளர் ஆனந்த் ராஜன். மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.