சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில், எதிரியுடன் கைக்கோர்த்ததால் ஆத்திரத்தில், வாலிபரை கடத்தி சென்று, அரிவாளால் வெட்டிய , ரவுடி கும்பல் நான்கு பேரை கைது செய்தனர்,

தண்டையார் பேட்டை, நேதாஜி நகர், 5 வது தெருவை சேர்ந்தவர் சுந்தர், இவரின் மகன் பன்னீர்செல்வம் (29), ஆவார், அதே பகுதி, தமிழன் நகர், குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மோகனசுந்தரம்(28), இவர் ரவுடி ஆவார், இருவரும் நண்பர்கள், தண்டையார் பேட்டை, துர்கா தேவி நகர், 5 வது தெருவை சேர்ந்தவர் நாட்டாமை பிரபு(எ) சிவதாசன்(25) , இவரும், மோகனசுந்தரமும் பரம எதிரிகள் ஆவார். இந்த நிலையில், பன்னீர் செல்வம், நாட்டாமை பிரவுடன் சேர்ந்து விட்டார், பின்னர், மோகன சுந்தரம் குறித்து , சில தகவலை கூறி வந்துள்ளார், இதனால், ஆத்திரமடைந்த மோகன சுந்தரம், தனது கூட்டாளிகளான தண்டையார் பேட்டை , பட்டேல் நகர் முதல் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் பாபு(24), அதே பகுதி பாண்டி மகன் அப்பு(எ) பிரபு(28), காதர் பாஷா மகன் ராஜா முகம்மது(34), ஜமீல் அகமத் மகன் சதாம் உசேன்(28) ஆகியோருடன் சேர்ந்து, பன்னீர் செல்வத்தை கடத்தினர், அங்கு, நாட்டாமை பிரபு குறித்து தகவல் தெரிவிக்க கூறி, கத்தியால் காது, கைவிரலை வெட்டினர்.

அவரை காப்பாற்ற பொது மக்கள் கூடியபோது, மோகன சுந்தரம் தப்பிவிட்டார், பாபு உட்பட நான்கு பேர் சிக்கினர்,

பன்னீர் செல்வம் புகாரின் பேரில், ஆர்கே நகர். போலீசார் வழக்கு பதிவு செய்து , நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு கத்தி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனம் ஆர் கே நகர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.