சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையாளராக பணிபுரியும் ஜூலியட் சீசர் இவரின் முகநூல் பதிவை பின் தொடர்ந்து அதே போல் போலி கணக்கை உருவாக்கி உதவி ஆணையரின் நண்பர்களிடம் எல்லாம் தனக்கு உதவி செய்யுமாறு பணம் கேட்டுள்ளனர் இந்த பதிவை பார்த்த சக நண்பர்கள் உதவியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் அதிர்ச்சியில் உறைந்து போன உதவி ஆணையர் இந்த பதிவை நான் போடவில்லை முகநூல் கணக்கு என்னுடையது இல்லை என்று கூறி தனது பெயரைச் சொல்லி யாரும் ஏமாற வேண்டாம் என்ற எண்ணத்தில் வாட்ஸ்அப் குழுவில் உண்மை சம்பவம் குறித்து பதிவுகளை பதிவிட்டிருந்தார் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர். சம்பவம் குறித்து உதவி ஆணையரிடம் கேட்டபோது இந்த குற்றவாளிகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் கூடிய விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறினார்.

பலவித நூதன திருட்டில் ஈடுபட்டுவரும் ஆசாமிகள் காவல் உதவி ஆணையர் என்று தெரிந்தும் பண மோசடியில் ஈடுபட்டது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.