சென்னையில் தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரானா தொற்றினால் பாதிக்கப்படுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் வாகன சோதனையில் தீவிரம் காட்டி வாகன ஓட்டியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவதும் அவர்களது வாகனத்தை கைப்பற்றி ஓட்டி செல்வதும் முக்கிய காரணமாக இருக்கலாம். தொடுவதன் மூலமாக பரவும் இந்த தொற்று கிருமிகள் அடுத்தவர் ஓட்டி வரும் வாகனத்தை மறித்து சாவியை பறித்து என தொடுவது அதிகம் இருப்பதால் கொரானா பரவல் அதிகமாக காவல்துறையினருக்கு பரவ வாய்ப்புகள் உள்ளன என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். உடனடியாக தமிழக அரசுக்கு தெரியவந்து காவலர்களை கொரானா தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.