சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் மாதம் 2 வது வாரம் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 சிறுவர்கள், 9 பெண்கள், 8 ஆண்கள் உட்பட 22 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கு சாக்லேட்டுகளும், மற்றவர்களுக்கு பழங்களையும் மருத்துவமனை ஊழியர்கள் வழங்கினர்.

இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படியும், உடல் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகும்படியும் மருத்துவர்கள் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

மண்ணடியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட திருவொற்றியூர், மணலி, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.