சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ரோந்து வாகனத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்த ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவடி பகுதியில் வசித்து வரும் அந்த காவலருக்கு 28 ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தண்டையார்பேட்டை பகுதியில் மார்க்கெட்டில் பாதுகாப்பு பணி, வாகன சோதனை போன்ற பணிகளை அவர் செய்து வந்துள்ளார். மேலும் காவல் நிலையம் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.