சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அவசர சிகிச்சைக்கு உதவும் வகையிலான 10 மொபைல் மருத்துவ சேவை வாகனம் மற்றும் 2 ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் சேவையை சென்னை மாநகர ஆணையாளர் பிரகாஷ், சென்னை மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான வருவாய் துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ராதா கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு..

அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் சென்ட்ரல் முதல் பேசின் பாலம் வரை உள்ள பகுதிகளில் மக்கள் மாலை வேளைகளில் சுற்றி திரிகின்றனர்.முதியோர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் அறிகுறி இல்லை என்றாலும் விழிப்போடு செயல்பட வேண்டும் தேவையற்ற அச்சமும் வேண்டாம்,கவன குறைவும் வேண்டாம் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பரிசீலனை செய்து தடுக்க நடவடிக்கை போர்க்கால அடிப்படியில் எடுக்கப்பட்டு வருகிறது.ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்தோம் சிறப்பான மருத்துவம் வழங்கப்படுகிறது சுவாசகவசம் அணிந்தவர்கள் பேசும்போது சுவாசகவசத்தை எடுத்துவிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் வருவாய் துறையினர் என அனைத்து துறையினரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் 4000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக பள்ளிகள், திருமண மண்டபங்களில் படுக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வோம் அடுத்த வாரத்திற்குள் 10000 படுக்கைகள் என மாதத்திற்குள் 50000 படுக்கைகளை தயார் செய்வோம்
தன்னார்வளர்களால் பரவுவதால் அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். டெலிவரி பாய்ஸ் மற்றும் கடை வைத்திருப்பவர்களை சோதனை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான வருவாய் துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.