சோளிங்கர் அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் ஆர்.கே.பேட்டை அக்சயா வித்யாலயா பள்ளி சார்பில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.நிகழ்ச்சிக்கு தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர் சந்தியா,சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சுகாதார ஆய்வாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி துணை தலைவர் கஜேந்திரன் வரவேற்றார்.

பேரணியை அம்மையார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் துவக்கி வைத்தார்.பேரணி திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.இதில் மாணவ.மாணவிகள்.ஊராட்சி மற்ற உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.