சென்னை: ராயபுரத்தில் உல்ல அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் உலக நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், பச்சிளம் குழந்தை பராமரிப்பு கடை வெளியிட்டார். மேலும் முதல் நிலை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக குளுக்கோமீட்டர் வழங்கினார்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு நினைவு பரிசினையும் வழங்கினார்.
அப்பொழுது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோய்த்தொற்று காலங்களிலும் கூட அரசு சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் இந்த காலக்கட்டத்திலும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு வாரம் மற்றும் உலக நீரிழிவு தின நிகழ்ச்சி தற்பொழுது நடைபெற்றதாகவும், இம்மருத்துவமனையில் கருவுற்று நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 507 நபர்களுக்கு சிறப்பான மருத்துவத்தின் மூலம் தாய் மற்றும் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் மருத்துவம் அளித்தது.
பாராட்டுக்குரியது என்று கூறியவர் கொரோனா நோய் தொற்று கூடிய நீரிழிவு நோயாளிகள் 90% நபர்களை காப்பாற்றி இருப்பதும் பாராட்டுக்குரியது என்று கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை குறைந்திருப்பதாகவும் இதற்காக உலக சுகாதார துறையிடம் இருந்து பாராட்டுக்கள் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது வரக்கூடிய காலங்களில் பண்டிகைக் காலமான தீபாவளி, தை பொங்கல், விழா கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். என்றும் உலக அளவோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நோய்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு சதவீதமாகக் குறைந்திருப்பதாகவும் மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.