சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மற்றும் அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் ஆகியோர் ஒன்று சேர்ந்து, கொருக்குப்பேட்டை, திருவள்ளூர் நகரில், கொரோனா விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

சென்னையில் மக்களிடையே கொரோன பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கொருக்குப்பேட்டை திருவள்ளூர் நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மற்றும் அருணோதய குழந்தை தொழிலாளர்கள் மையம் இனைந்து கொரோன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில் இளைஞர் ஒருவர் கொரோன வேடமணிந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளை கழுவுதல் சமூக இடைவெளி பேணுதல் மற்றும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார மையத்துக்கு தகவல் தெவித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்வது அதேபோல் கொரோன வைரஸை தடுப்பதற்கு பாடுபட்டு வரும் மருத்துவர்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பன போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடத்தப்பட்டது.இதனை திட்ட மேலாளர் சந்தன மேரி,ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ராஜன்,மகாலட்சுமி ரம்யா மற்றும் O.R.W களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.