கொரோனா வைரஸின் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி அளிக்கபட்டுள்ளது இதை காரணமாக வைத்து பொதுமக்கள் அனைவரும் வெளியே சாதாரணமாக சுற்றி வருகின்றனர் இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் இரவு பகலாக சாலைகளில் கஷ்டப்பட்டு வருகின்றனர் அவ்வாறு பணியாற்றும் காவலர்களுக்கு பீப்புள் போரம் ஆஃப் இந்தியா சார்பாக தினமும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர் மக்கள் பேரவை மத்திய அரசின் (பீப்புள் போரம் ஆப் இந்தியாவின்) தேசிய அதிகார தலைவரான சீனிவாசன் அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் தடை பிறப்பித்த நாள் முதல் இன்று வரை தினமும் திருவொற்றியூர் எண்ணூர் மணலி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் உணவு பொட்டலங்களையும் வழங்கி வருகின்றனர் அதேபோல் சாலையில் வெயிலில் கஷ்டப்படும் போக்குவரத்து காவலர்களுக்கு அவர்கள் பணி புரியும் இடத்திற்கே சென்று தண்ணீர் பாட்டில்கள் உணவு பொட்டலங்களையும் சுவாச கவசம் ஆகியவற்றை அரசு அறிவுறுத்தலின் படி சுகாதாரமான முறையில் வழங்கி வருகின்றனர் தொடர்ந்து உணவு அழிக்கும் பீப்புள் போரம் ஆப் இந்தியாவிற்கு காவலர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர் அதேபோல் தேசிய அதிகார தலைவரான சீனிவாசன் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றியை தெரிவித்தார் மேலும் இந்த தடை நீடிக்கும் அனைத்து நாட்களுக்கும் உணவினை வழங்கப்போவதாகவும் தெரிவித்தார் மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அடுத்த ஜென்மத்தில் தூய்மை பணியாளர்களின் பாதங்களாக பிறக்க விரும்புவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.