சென்னை ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிர்தோஷ் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இரவு தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அப்போது மர்ம கும்பல் பிர்தோஷ்சை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர் அடுத்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த பிர்தோஷின் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர் அருகில் இருந்தவர்கள் பிர்தோஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இச்சம்பவம் குறித்து ஆர் கே நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அப்பொழுது தண்டையார்பேட்டை ஐ.ஒ.சி பகுதியில் ரவுடிகள் மறைந்து இருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவலர்கள் ஐந்து நபர்கள் கொண்ட கும்பலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (எ ) GH ரமேஷ், ஆனந்த் (எ) லொட்ட ஆனந்த், கார்த்திக், சரவணன், வெங்கடேசன், இந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை ஆர் கே நகர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். ஆர் கே நகர் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி அதிகரித்து வருகிறது காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறைவு அரங்கேறும் சம்பவங்கள் அதிகம் இரவு நேரத்தில் நிம்மதியாக நடமாட முடியவில்லை காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் முக்கிய சாலைகளில் வந்து போகும் காவலர்கள் அனைத்து தெருக்களிலும் வர வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.