சென்னை துறைமுகத்தில் இருந்து மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. எண்ணூர் விரைவு சாலையில் இருந்து மணலி சாலையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. சாலையில் கவிழ்ந்துள்ள கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.