தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தற்பொழுது நடைபெறவிருக்கும் நீட் மற்றும் jee தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வட சென்னை காங்கிரஸ் கமிட்டியை சார்ந்தவர்கள் தண்டையார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்தியாவில் 10 மாநிலங்களில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் பொழுதும் நீட் தேர்வை கண்டிப்பாக நடத்தியே தீருவேன் என்று பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விரோத ஆட்சியாக செயல்படுவதாகவும் தற்பொழுது நோய்த் தொற்றால் உலக நாடுகள் பாதிப்பில் இருக்கும் சூழ்நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சி தினமும் ஏதாவது ஒரு புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை இன்னலுக்கு தள்ளுவதாகவும் இக்கட்டான காலகட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சோனியா காந்தி அவர்களின் வழிநடத்தலின் படி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணைக்கிணங்க காங்கிரஸ் கமிட்டியின் வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி மற்றும் முன்னணி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் தண்டையார்பேட்டை காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.