பொது மக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை வாட்ஸாப் வீடியோ காணொளி காட்சி மூலம் தெரிவிக்க சிறப்பு எண் அறிவிப்பு.

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின் பெயரில்,வடக்கு கூடுதல் ஆணையாளர் அருண், அறிவுறுத்தலின் படி பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை வாட்ஸ் அப் காணொளியின்  மூலம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமியின்  9498133110 என்ற(what’s app) எண்ணிற்கு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் மட்டும் மதியம் 12 மணி முதல் 01:00 மணிவரை தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மக்களின் குறைகளை துணை ஆணையரின் நேரடிப் பார்வையில் தீர்க்கப்படும்.