வடசென்னை பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டு குறித்தும், நோயாளிகளுக்கு செய்துவரும் மருத்துவ ஏற்பாடுகள் குறித்தும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜியிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ராயபுரம் ஆடுதொட்டி பகுதியில் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டுள்ள பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு முக்கவசங்களை வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறவுரை வழங்கினார்.

மேலும் காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியில் முடக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் வடசென்னை காவல் இணை ஆணையர் கபில்குமார் சரத்கர் உட்பட காவல் துறை அதிகாரிகளும், காவலர்களும் உடன் இருந்தனர்.