சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலத்தில் கடந்த மாதம் செல்போன் பறித்துச் சென்றதாக ஆர்கேநகர் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடி ராஜன் தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் ஆனால் புதிய முகம் என்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கண்டறிய முடியவில்லை அதை தொடர்ந்து செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை ஆய்வு செய்ததில் புரசைவாக்கம் பகுதியில் திருடு போன செல்போன் ஒருவர் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்தது அந்த நபருக்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட ஆர் கே நகர் காவல் துறையினர் காவல் நிலையம் வரும்படி அழைத்து விசாரணை மேற்கொண்டனர் காவலர்கள் நடத்திய விசாரணையில் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் தீனா என்கின்ற தினேஷ் (19) 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை 2500 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது உடனடியாக கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் தந்தை கார் ஓட்டுநராகவும் தாய் வீட்டு வேலை செய்வதாகவும் இவர்களின் கடின உழைப்பில் விலை உயர்ந்த யமஹா ஆர்1,5 பைக் தினேஷுக்கு வாங்கி கொடுத்து கல்லூரியில் சேர்த்து படிக்க அனுப்பியதாகவும் ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்படுவதால் முதல்முதலாக செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருட்டு வழக்கில் சிறுவன் ஒருவனை பயன்படுத்தியது தெரியவந்தது இவர்கள் இருவரையும் கைது செய்த ஆர்கே நகர் காவல் துறையினர் திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.