சென்னை நுங்கம்பாக்கத்தில் வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி தலைமையில் தமிழ் நாடு மற்றும் புதுவை மாநில முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் சி.என்.ராமமூர்த்தி கூறுகையில் கடந்த 40 ஆண்டு காலமாக வன்னிய மக்களுக்காக போராடி வருவதாகவும் 20:07:1980 திண்டிவனத்தில் வன்னியர் மக்களின் ஒற்றுமைக்காக அன்றே தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் என்றும் அன்றைய தேதியில் சங்கத்தின் பொதுச் செயலாளராக வன்னிய மக்களுக்கு பணியாற்றி வந்ததாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் 15:07:1988. திண்டிவனம் தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கையில் உறுப்பினராக இனைத்து அடையாள சீட்டு பெற்றுக்கொண்ட மதுரை (வயது 53) மற்றும் அவரின் மகன் லிங்கேசன் அன்றைய (வயது 22) சேர்க்கையில் அடையாள சீட்டு பெற்று இருந்தார். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திண்டிவனம் லிங்கேசன் 15:07:1988 அன்றைய தேதியில் பெற்றுக்கொண்ட அடையாள உறுப்பினர் சீட்டை கொண்டு வந்தது காண்பித்தார்.