சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைசி கால சீயோன் திருச்சபை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஐந்து மாதங்களாக தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் கோயில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடப்பட்டிருந்தது இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தது இதனடிப்படையில் அரசு விதிமுறைகளின்படி ஒன்றாம் தேதி முதல் கோவில்கள் தேவாலயங்கள் மசூதிகள் திறக்கப்பட்டது தளர்வுகள் வழங்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று வடசென்னையில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபட துவங்கியுள்ளனர் இந்நிலையில் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைசி கால சீயோன் திருச்சபையில் காலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது வழிபட வரும் மக்களுக்கு நுழைவுவாயில் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர், சுவாசகவசம் வழங்கப்பட்டு தமிழக அரசின் வழிமுறைகளின் படி முறையாக ஆலயத்தினுள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தளங்களில் எல்இடி டிவி மூலமாக பிரசங்கம் தெரியும் வகையில் திருச்சபை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது ஐந்து மாதங்களுக்கு பிறகு திருச்சபையில் தனது சொந்த பந்தங்களோடு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.