நாவம்பர் 2 கல்லறை திருநாளை ஒட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்று கல்லறையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கல்லறை திருநாளுக்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 

காசிமேடு பகுதியில் உள்ள மிகப் பெரிய அளவிலான கல்லறையில் வடசென்னை பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கல்லறையின் வெளிப்புற கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த பேனரில் அனைத்து நிகழ்வுகளும் நோய் தொற்று காரணமாக நடைபெறாது கல்லறைத் தோட்டம் கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும். மக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

வழிபட வந்தவர்கள் கல்லறையின் வெளிப்புறத்தில் உள்ள கதவுகளின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி சென்றனர். வடசென்னை பகுதியைச் சார்ந்த பலரும் கல்லறை திருநாளை முன்னிட்டு வழிபட வந்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.