கொரானா ஊரடங்கு நீடித்து வருவதால் பொழுது போக்க வழி இல்லாமல் வடசென்னை பகுதிகளில் பல இடங்களில் அரசு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி காத்தாடி பறக்கவிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். கடந்தவாரம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கழுத்தை பதம் பார்த்தது மாஞ்சா நூல் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார் இதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டம் விட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது இந்தப் புகார் தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் தெய்வேந்திரன் மற்றும் சக காவலர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அப்போது சட்டவிரோதமாக மொட்டை மாடிகளில் பட்டம் விட்டவர்கள் மீது கடந்த 3 நாட்களில் 6 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.