சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். என்கிற கட்ட குமார் பிரபல கஞ்சா வியாபாரியான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்தபோது தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி குற்ற வழக்கில் தொடர்புடைய செல்வக்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதன் அடிப்படையில் உடனடியாக அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பில் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற தீர்ப்பு கஞ்சா விற்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது