வாலாஜாபேட்டை அனைத்து சர் ஜமாத்து & இளைஞர்கள் சார்பில் அனைத்து கட்சி தோழர்களும் அனைத்து ஜமாத்தார்கள் ஆதரவாளர்களும் வியாபாரிகளும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் மத்தியம் 2மணி முதல் 4மணிவரை
நடைபெற்றது

இதில் ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து சர் ஜமாத் தலைவர் ஜனாப்அக்பர்ஷெரீப் முன்னிலை வகித்து அனைத்து பள்ளிவாசல் மெளலானாகள் மற்றும் முத்தவல்ளிகள் அப்துல் கரீம், கவுஸ்பாய், கரிம்பாய், திப்புபாய், இர்ஃபான், மற்றும் அனைத்து கட்சி சார்பில் தி.மு.க.நகரசெயளாளர்
புகழேந்தி
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசேன்
அ.மு.மு.கா.சார்பில் நகர செயலாளர் சுரேஷ்Ex.Mc கம்யூனிஸ்ட் பொருப்பாளர்
எம்.சி.மணி
இந்திய குடியரசு கட்சி ரவிவாணன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பெரும் திரளாக கலந்து கொண்டு CAA, NRC, NPR,ஆகிய அடக்குமுறை சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர் முடிவில் Y.அக்பர்செரிப் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர் அனைத்து கட்சி தோழர்களும் அனைத்து சர் ஜமாத் இளைஞர்களுக்கும் நன்றி கூறினார்…

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…