சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து சமூக நலத்துறை இடம் ஒப்படைத்தனர் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர் அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தைக்கு முத்தமிழ்ச் செல்வன் என்று பெயர் சூட்டினார்

பிராட்வே முத்தியால் பேட்டை பகுதியில், கடந்த 14ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன ஆண்குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு இருந்தது. அதை அந்தப் பகுதி காவல் ஆய்வாளர் மீட்டெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
பரிசோதனை செய்ததில் குழந்தை எடை குறைவாக இருந்தது இந்த குழந்தைக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் குழந்தை மகப்பேறு மருத்துவமனையில் இருந்து தாய்பால் வங்கி மூலம் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கப்பட்டு இன்று ஆரோக்கியமாக 2கிலோ உடல் எடையுடன் நலமாக உள்ளது மேலும் இந்த குழந்தை சமூக நல துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.