சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் காந்தி நகர் மெயின் ரோட்டில்
அமைந்துள்ள 45ஆண்டுகள் முந்திய பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தச பூஜ மஹா கணபதி கோவில் கும்பாபிஷேகம் ஆச்சாரியார் அழைப்பு, எஜமானர் அனுக்ஞை, வாஸ்து பூஜை நிகழ்ச்சிகளும் யாகசாலை பிரவேசம், ஹோமங்கள், அக்னி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகளும், உபயவேதபாராயணம், சாந்திஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தொழிலதிபர் கார்த்திக் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் N. டில்லி, போட்டோ மணி , கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.