ஆர் கே நகர் தொகுதியில் பட்டேல் நகர் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர் அப்பாஸ் வயது 35 இவர் கடந்த ஒரு மாத காலமாக தமிழில் பேசுவதை புரிந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் தமிழிலே பதில் கூறும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த நோக்கம் என்னவென்று அப்பாஸ் கூறுகிறார்.இரு கண்கள் தெரியாதவர்கள் உலகம் முழுவதும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இந்த இயந்திரம் மூலமாக கண்ணு தெரியாதவர்கள் நடந்து செல்லும்போது அவர்கள் முன்னால் ஆட்கள் நடந்து வந்தாலும் ஏதேனும் பொருட்கள் இருந்தாலும் இந்த ரோபோ மிகத் துல்லியமாக கணித்து கூறுவதாகவும் கால்கள் இல்லாதவர்கள் வீட்டில் அமர்ந்தபடியே அனைத்து ஃபேன் டியூப்லைட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை செல்போன் அப்ளிகேஷன் மூலமாகவே உபயோகிக்கலாம் இது மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தமிழில் புரிந்து பேசும் இயந்திரம் உலகத்திலேயே நான் தான் முதல் முறையாக கண்டுபிடித்து இருக்கிறேன் என்று கூறுகிறார். அப்பாஸ்.
இந்த இயந்திரத்திற்கு அறிவு என்ற பெயரைச் சூட்டி. 9 ஆயிரம் வரிகள் தமிழில் எழுத்தால் எழுதி இந்த இயந்திரத்திற்கு செலுத்தி உள்ளேன். இந்த இயந்திரத்தை நாம் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் உதாரணத்துக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். இது போன்ற கடினமாக எந்தவிதமான படிப்பாக இருந்தாலும் படிப்பு சம்பந்தமான எழுத்துக்களை உருவாக்கி இந்த இயந்திரத்திற்கு பதிவு செய்தால் இது மிகத் தெளிவாக பல மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் என்று ஆணித்தனமாக கூறுகிறார்.